காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 47 வீடுகள் முழுமையாகவும், 224 வீடுகள் சேதமாகிஉள்ளன.மழை காரணமாக, ஆறு பேர் இறந்துள்ளனர். மேலும், 18 மாடுகள் ஒன்பது ஆடுகள்; இரண்டு கன்றுக்குட்டி; 10 கோழிகள் இறந்துள்ளன; 11 பேர் காயமடைந்துள்ளதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகமெங்கும் பெய்து வரும் கன மழை காரணமாக, உயிரிழப்பு மற்றும் ஏராளமான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக, குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாத சூழலும் நிலவுகிறது.நான்கு நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, 47 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன;
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் தரப்பில் கோரிக்கை
விடுத்துள்ளனர்.


