ரஜினிகாந்த் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்?

Published:

rajini trisha - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்ரன், த்ரிஷா, அஞ்சலி ஆகிய மூன்று நாயகிகள் நடித்தபோதிலும் ரஜினிக்கும், இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு ஜோடி யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

த்ரிஷா மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் நடிக்கவிருப்பதாகவும், அஞ்சலி, ரஜினியின் மகளாக நடிக்கவிருப்பதகாவும் கூறப்படுகிறது.

மேலும் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மேலும் ரஜினிகாந்த் ‘நான் சிகப்பு மனிதன்’, ‘தர்மத்தின் தலைவன்’ ஆகிய படங்களில் பேராசிரியராக நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் மீண்டும் பேராசிரியராக நடித்து வருகிறார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img