தபால் நிலையத்தில் அக்கௌன்ட் இருக்கா.‌? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்

india post - 2026

பணத்தை சேமிக்க போஸ்ட் ஆபீஸ் மிகச் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. எஃப்.டி மற்றும் ஆர்டி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளுக்கான திட்டம் என 9 வகையான சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க இந்த சேமித்து திட்டங்கள் பெரிது உதவுகின்றன.

குறைந்தபட்ச அபாயத்துடன் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெறும் சேமிப்பு மட்டுமில்லை, வட்டி, வருமானம், வரிச்சலுகை என போஸ்ட் ஆபீஸில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதே நேரம் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பணத்தை சேமிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது. சேமிப்பதற்காக பெரிய தொகையை எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் உள்ள முதலீட்டாளர்கள் கூட மாத வருமான திட்டம் போன்ற திட்டங்களில் சிறிய அளவிலான தொகையை கஷ்டப்பட்டு சேமித்து வருகிறார்கள்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

அவர்கள் பணத்திற்கு பாதுகாப்பு மிக மிக அவசியம். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களை இந்திய தபால்துறை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்துள்ளது.

அதாவது, சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களிடம் கைவரிசையை காட்டிவிட கூடாது என்பதில் தபால் துறை தெளிவாக உள்ளது. அதனால் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

இந்திய தபால் துறை சில சர்வே, வினாடி வினா போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அரசாங்கம் மானியத் தொகை வழங்கி வருவதாகவும், சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவி வருகின்றன.

சர்வே அடிப்படையில் இந்திய தபால் துறை மானியம், போனஸ் அல்லது பரிசுகளை வழங்குவதில்லை இதை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது.

அதே போல் தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வோர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர்கள் விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, எஸ்பிஐ வங்கியும் இதேப்போன்ற எச்சரிக்கை செய்தியை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories