10 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்தி, விளம்பரம், சுற்றுலா, கலை, பண்பாடு உள்ளிட்டவைகளின் மானிய கோரிக்கை மீது பேரவையில் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று நடைபெறும் கூட்டத்தில் சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்; போராடியவர்கள் மீது வழக்கு பதிவு உள்ளிட்ட விவகாரம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நீதிமன்றமே அரசாணை குறித்து சந்தேகம் எழுப்பியது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு, ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது மற்றும் வழக்கு பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.



