திருச்சி மாநகரில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சற்றுமுன்

திருச்சி மாநகரில் நவம்பர் 25 ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 12 ஆம் தேதி அன்று மதுரையில் பெரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், அடுத்த கட்டசெயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் கூட்டணியின் அங்கங்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நவம்பர் 25 ஆம் தேதி அன்று திருச்சி மாநகரில் தனியார் விடுதி கூட்ட அரங்கத்தில் காலை 10 மணி தொடங்கி,மாலை 6 மணி வரை நடைபெறும்.

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.