சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலு குறைந்துள்ளது. இதன் காரணமாக, புயலுக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


