இலவச கணினி கண்காட்சி இன்று தொடக்கம்

Published:

15 Aug 05 computer fair - 2026

தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தொழிலை மேம்படுத்துவது குறித்த இலவச கணினி கண்காட்சி வேலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க மாவட்டத் தலைவர் எம்.வி. சுவாமிநாதன் தெரிவிக்கையில், வேலூர் மாவட்ட குறு மற்றும் சிறுதொழில் முனைவோர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொழிலை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்த கணினி கண்காட்சி நடைபெற உள்ளது. இன்று ராணிப்பேட்டையிலும், நாளை குடியாத்தத்திலும், நாளை மறுநாள் திருப்பத்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் தொழில் முனைவோர் 94862 57127, 94432 48559 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

Related articles

Recent articles

spot_img