குஷ்புவும் நக்மாவும் இருந்தால் நல்லதுதானே! : வசந்தகுமார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் 17 ஆண்டுகளாக இருந்த ஹெச்.வசந்தகுமார், அந்த பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தமிழ்நாடு காங்.கமிட்டியில் துணைத் தலைவர் பொறுப்பில் வசந்தகுமார் தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறியுள்ளார்.

வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் இளங்கோவனின் இந்த அறிவிப்பால் பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம், மறியல் என்பதோடு பலர் கட்சிப் பொறுப்புகளை விட்டும் விலக தொடங்கியுள்னர்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் வசந்தகுமார்
கூறியுள்ளதாவது :-

காங்கிரஸ் கட்சி புதிய அரசியலை நோக்கி பயணம் செய்கிறது. குஷ்பு, நக்மா என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பைக் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் அவர்களுக்கான வேலைகளை செய்யும்போது கட்சிக்கு நல்லதுதானே நடக்கும். கட்சி வளரத்தானே செய்யும். இரண்டும் நல்லதுதானே என்று வசந்தகுமார் கூறியுள்ளார்.