இது யாருடைய குழந்தை ? : உங்களுக்கு தெரியுமா ?

 
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.
 
பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில் வெள்ள பாதிப்பால் ஒரு சில பெற்றோர்கள் பச்சிளங்குழந்தைகளையும் தவறவிட்டுள்ளனர்.
 
அவ்வாறு இரு குழந்தைகள் தவறியுள்ளதாகவும் குழந்தைகள் எங்கு தற்போது உள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படாமல் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு‬ தகவல் தெரிவிக்க கூறி புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.
 
எவருக்காவது இரு குழந்தைகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் பற்றிய தகவல் தாங்களுக்கு தெரிந்தால் பெற்றோர்களிடமோ அல்லது உங்களுக்கு அருகமையில் உள்ள காவல் நிலையத்திலோ மேற்ப்படி குழந்தைகள் குறித்தான  விபரத்தை தெரிவிக்கவும்.