கேரளத்தில் குவியும் ரோஹிங்யா முஸ்லிம்கள்; பாதுகாப்பற்ற தமிழக எல்லை! போலீஸார் உஷார்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

Rohingya Muslims in Jammu - 2026

திருவனந்தபுரம்: மியான்மரில் இருந்து வெளியேறி இந்தியாவுக்குள் வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள், வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கேரளத்துக்கு வந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மியான்மர் நாட்டில் ரோஹிங்யா பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்ததை அடுத்து, அவர்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். லட்சக் கணக்கான அகதிகள் இந்தியா, வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால், அவர்களால் தங்கள் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டதாகக் கூறி வங்கதேசம் அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

இந்நிலையில், வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பரவிய ரோஹிங்யா அகதிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பிரச்னை வெடித்ததை அடுத்து, அவர்களை உள்ளூர் மக்கள் விரட்டி வருகின்றனர். இதனிடையே காஷ்மீரில் தங்குவதற்கும் ரோஹிங்யா மக்களுக்கு பிரச்னை ஏற்பட்ட நிலையில், அவர்களின் கவனம் கேரளத்தின் பக்கம் திரும்பியது.

rohingyan in kerala - 2026

இதை அடுத்து ரோஹிங்யா அகதிகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் வர திட்டமிட்டுள்ளதாகவும். அதற்காக தென் மாநிலங்களுக்கு வரும் ரயில்களில் அதிக அளவில் ரோஹிங்யா அகதிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், குறிப்பாக ஹைதராபாத்தில் இருந்து வரும் ரயில்களில் அவர்கள் கேரளத்துக்கு வருகின்றனர் என்றும் மத்திய உளவுப் பிரிவு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த தென் மாநிலங்களின் காவல் துறையினர், ஆந்திராவிலோ அல்லது சென்னையிலோ தடுத்து நிறுத்தாமல், தென்மாநிலங்களுக்கு அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், கேரளத்துக்கு அதிக அளவில் ரயில்களின் மூலம் ரோஹிங்யா முஸ்லிம்கள் வந்து குவிந்துள்ளனர். நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை அம்மாநில போலீசார் கண்டறிந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தைபூ (35) அவரது மனைவி சப்பூரா காதூன்(27) அர்ஷாத் (25) மற்றும் 11 வயதிலும், 6 மாதத்திலும் உள்ள குழந்தைகள் என்பதும், அவர்கள் ரோஹிங்யா அகதிகள் என்பதும் தெரியவந்தது.

அவர்கள், கேரளாவின் விழிஞ்ஞம் செல்வதாகக் கூறியுள்ளனர். எந்த வித ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளான களியக்காவிளை சாலை, செங்கோட்டை சாலை வழியாக தமிழகத்துக்குள் ரோஹிங்யா முஸ்லிம்கள் ஊடுருவியிருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, செங்கோட்டை வழியாக தமிழகம் வரும் எல்லையில் உள்ள புளியரை சோதனைச் சாவடியில் கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புடன் இருக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

ஏற்கெனவே கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழக கிராமங்களில் மத மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வரவும் ஊடுருவலும் மேலும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கருதப் படுகிறது. இது தமிழக போலீஸாருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

1 thought on “கேரளத்தில் குவியும் ரோஹிங்யா முஸ்லிம்கள்; பாதுகாப்பற்ற தமிழக எல்லை! போலீஸார் உஷார்!”

  1. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் 10 நாட்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தும் காவல்துறையினரின் கவனக்குறைவே காரணம். இதனால் பின் நாட்களில் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்பு .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.