மோடி குறித்து வீடியோ பதிவிட்டு அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., மனு!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

modi mankibaat - 2026

பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோபதிவு செய்து யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் நகரகாவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூரில் உள்ள சாமானியமக்கள் கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன், அமராவதி ஆறு பாதுகாப்பு இயக்கபொதுச் செயலாளர் தென்னரசு ஆகியோர் பிரதமர் மோடி லீலைகள் என்று சொல்லி மோடி குறித்து பணமதிப்பு நடவடிக்கை, நீட்டை தமிழகத்தில் திணிப்பது, தமிழகத்தில் எய்ம்ஸ் அனுமதிக்காதது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ஒவ்வொரு மோடியின் படத்தை வைத்து இறுதியாக மோடியின் படங்களை தீயிட்டு அழிப்பது போன்ற வீடியோ எடுத்து யூ-டியூப்பில் ஏற்றியுள்ளனர்.

மேலும், வாட்ஸ் அப் மற்றும் முகநு}லில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில் பிரதமரை அவமானப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவராக இருக்கும் செல்வன் கரூர் நகரகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.