18 பேர் தகுதிநீக்க தீர்ப்பு எதிரொலி! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குற்றாலத்தில் முகாம்!

Published:

ttvdinakaran mlas courtallam1 - 2026

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதன் எதிரொலியாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் முகாம் இட்டுள்ளனர்.

18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரவிருப்பதை ஒட்டி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழைய குற்றாலம் அருகே உள்ள தனியார் ரிசார்ட்ஸ்ஸில் முகாமிட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ttvdinakaran mlas courtallam2 - 2026

நேற்று முன்தினம் அம்மா முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.

ttvdinakaran mlas courtallam4 - 2026

அதன்படி நேற்று இரவு முதல் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட்டுக்கு எம்எல்ஏக்கள் சாத்தூர் சுப்பிரமணியன், ஆண்டிபட்டி தங்கதமிழ் செல்வன், பெரியகுளம் கதிர்காமு, பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், மானாமதுரை மாரியப்பன் கென்னடி, கள்ளகுறிச்சி பிரபு, ஓட்டபிடாரம் சுந்தர்ராஜ் ஆகிய 7 பேர் முதல் கட்டமாக வந்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

ttvdinakaran mlas courtallam3 - 2026

இதனை தொடர்ந்து இரவுக்குள் மீதமுள்ள அனைவரும் விடுதிக்கு வருவதாக அமமுக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இன்று காலை எம்.எல்.ஏக்கள் அனைவரும் தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டு புனித நீராடுகின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்கியது போல குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்டில் முகாமிட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img