பதவி இழந்த 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல்..!

Published:

18 mla room sealed - 2026

சென்னை சேப்பாக்கத்தில் எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் 18 தகுதி நீக்க எம்.எல்.ஏக்க்ள் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏக்க்ள் தகுதிநீக்கம் செல்லும் என  சென்னை உயர் நீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 18 பேரின் தகுதிநீக்கத்தை உறுதி செய்தது.

இதனால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேல்முறையீடு குறித்து 18 பேரிடமும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள 18 பேரின் அறைகளுக்கும் சீல் வைக்கப் பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img