என்னிடம் எட்டு எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளார்கள். டி.டி.வி.க்கு ஆதரவாக 18
எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகிய மூன்று பேருடைய
அழுத்தத்திற்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆகியுள்ளனர்.
இந்த இணைப்பு ஒரு கடை தேறாத செயல்படாது. துரோகம் செய்துவிட்டதாக தான்
கடைக்கோடி தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
9 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக இருக்கும் பொழுது, 25க்கும் மேற்பட்ட
எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துள்ள டி.டி.வி. ஒரு அணியாக செயல்படக் கூடாதா?
தொண்டர்கள் தினகரனோடு இருக்கிறார்கள்.
கட்சி அவர்களோடு இருப்பதாக அவர்கள் நினைத்தால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை
சந்திக்க வேண்டும். இது கடைந்தெடுத்த துரோகம்.
சசிகலாவின் சீராய்வு மனு என்னவானது என்று கூட யாரும் கேட்கவில்லை. நட்டாற்றில்
விட்டுவிட்டனர்.
4 ஆண்டுகாலம் இந்தாட்சி நீடிக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. எந்த
நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் விவகாரம் நிலுவையில் இருப்பதால், பொதுக்
குழுவை கூட்ட முடியாது.
எங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
என்று திவாகரன் பேட்டி அளித்துள்ளார்.




