அதிமுக அணிகளின் இணைப்புக்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம்
டெல்லியில் இருந்து வருகிறது – என்றார் .மு.க.ஸ்டாலின்
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அதிமுக இரு அணையுமா என்பது
பதில் சொல்ல முடியாத கேள்வி எனவும் தினமும் ஏதாவது ஓரு காரணம் சொல்கின்றனர்
எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுகவின் இரு அணிகள் இணைவதால் மக்களுக்கு
நல்லது ஏதும் ஏற்படபோவதில்லை எனவும் அது
அவர்களுக்கு மட்டுமே நல்லது எனவும் தெரிவித்த அவர், மக்கள் இவர்களுக்கு
வாக்களிக்கவில்லை எனவும் இந்த ஆட்சி தொடர வாய்ப்பில்லை எனவும் கனிமொழி
தெரிவித்தார். தமிழருவி மணியன் தற்போது ரஜினியை முன்னிறுத்துவது போல ஏற்கனவே
பலரையும் முன்நிறுத்தி இருக்கின்றார் எனவும் கனிமொழி தெரிவித்தார்…




