விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

 
காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும், அவர் வந்தால் மகிழ்ச்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .
 
காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்ற முப்பெரும் விழா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
 
 
அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தாவது:
 
தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக சந்திப்பது வழக்கமானதுதான். காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சி. பாஜகவினர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவோம் எனக் கூறினர். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தடை நீங்கவில்லை. கூட்டணி குறித்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் முடிவு செய்யப்படும். இப்போதைக்கு வெள்ள நிவாரணப் பணிகளில்தான் கவனம் செலுத்தி வருகிறோம் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார் .