அடுத்த இரண்டு நாட்கள் கழித்து வீரிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள தகவல்…
மழை முன்னறிவிப்பு: கடந்த சில நாட்களாக நிலவி வந்த மந்தமான வானிலை இன்று முதல் முடிவுக்கு வருகிறது…அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. குறிப்பாக மழை குறைவாக பெய்த தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. இந்த மழை பொதுவாக உள் மாவட்ட பகுதிகளில் சற்று வீரியம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது… அடுத்த இரு நாட்களுக்கு விட்டு விட்டு மழை இருக்கும்.. திங்கள் முதல் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது…
டெல்டா மாவட்ட பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,நாகை, மற்றும் இராமாதபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, குமரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்.. கன மழை வாய்ப்பு குறைவே. .
கொங்கு மண்டல பகுதிகள்: நல்ல மழைப் பொழிவு வரும் வாரத்தில் இருக்கும். குறிப்பாக நீலகிரி,வால்பாறை, திருப்பூர், அவினாசி, பெருந்துறை, சத்தியமங்கலம், சேலம், தருமபுரி பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருக்கும்… கோவை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது
நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடக்கு மாவட்டங்கள்:கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், மாவட்ட பகுதிகளில் சற்று நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது…. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்..
சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள்: விட்டு விட்டு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. வரும் வாரத்தில் பெரும்பாலான பகுதகளில் நல்ல மழை இருக்கும்.
மத்திய மாவட்ட பகுதிகள்: திருச்சி, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.
தென் மாவட்ட பகுதிகள்: மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் இருக்கும்.




