பணத்திற்காக அரசியல் செய்யும் விஜயகாந்த் தேமுதிக கட்சியை பொது ஏலம் விடலாம் : நத்தம் விஸ்வநாதன்

 
 
பணத்திற்காக அரசியல் செய்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஏலம் விட்டு கூட்டணியை தேர்வு செய்யலாம் என்றும் தமிழக மின்துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்துள்ளார்.
 
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திஜி கலை அரங்கத்தில், அதிமுக அரசின் நான்கரை ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக மின்துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், விஜயகாந்த் திமுக, பா.ஜ.க, மக்கள் நல கூட்டணி போன்ற கட்சிகளுடன் பணம், தொகுதிகளுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
 
தேமுதிக கட்சியை பொது ஏலத்தில் விட்டு அதிக தொகை கேட்பவர்களுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்து கொள்ளலாம் என்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்ததார்.