கூவத்தாய் என்று ஜெயலலிதாவை அழைக்கலாமா? : விஜயகாந்த்

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூரில் இன்று ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல குற்றம் சாட்டினார் . மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கொண்டு வந்ததனால் ஜெயலலிதாவை காவிரித்தாய் என்று சொல்கிறார்கள். சென்னை வெள்ளத்திற்கு காரணமாக இருந்ததனால் அவரை ’கூவத்தாய்’ அல்லது ‘வெள்ளத்தாய்’ என்று அழைக்கலாமா?
 
நீங்கள் எனக்குகூட ஓட்டுப்போட வேண்டாம். உங்களுக்கு யார் நல்லவர்களாக தெரிகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப்போடுங்கள். ஜெயலலிதா உங்களுக்குத்தான் அம்மா. எனக்கு அவர் ஜெயலலிதாதான். மக்களுக்காக எந்த தமிழக அமைச்சரும் செயல்படவில்லை. ஊடக துறையினர் இது குறித்து பேச மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஆளும் அமுதிக கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர்கள்” என்று குற்றம் சாட்டினார் .