
திருச்சி விமான நிலைய கழிவறையில் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் நகைகளை போட்டு சென்றது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் வழியாக கடந்த சில மாதங்களக அதிக அளவில் தங்கம் கடத்தல் சம்பவமும், பறிமுதல் செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் உள்ள இமிக்ரேஷன் பிரிவு அருகில் இருந்த கழிவறையிலிருந்து ரூபாய் 20 லட்சத்து 28 ஆயிரத்து 516 மதிப்பிலான 399 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கழிவறையை சுத்தம் செய்யும் தொட்டியில் தங்க நகைகள் கிடப்பதாக சுங்கத் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து சுத்தம் செய்யும் தொட்டியில் தங்க நகையை போட்டது யார் ? என விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் தங்கத்தை போட்டு சென்ற நபர் யார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்