ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல : மனுஷ்ய புத்திரன்

 
திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினையும், மட்டும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரை நாங்கள் காறி துப்ப நினைத்தோம்.
ஆனால் அதற்க்கு முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார்.
விஜயகாந்த்தின் அந்த செயல் பாராட்டதக்கது என மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர்திடலில் அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பங்கேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மனுஷ்ய புத்திரன் பத்திரிக்கையாளரை பற்றி பேசிய செய்தி சமூக ஊடகங்களின் வைரலாக பரவி வருகிறது .
இந்த நிலையில் மனுஷ்ய புத்திரன் கூறுவதாக வாட்ஸ்ஆப்பில் இன்று வெளியாகியுள்ள தகவலில் கூறப்படுவதாது :-
நேற்று நான் திருமங்கலத்தில் பத்திரிகையாளர்கள் மேல் விஜயகாந்த் முன்வைத்த விமர்சனம் குறித்து நான் பேசியதை கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நான் ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறையை சுட்டிக்காட்டுவதுதான் என் நோக்கமே தவிர எந்தவகையிலும் ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல.
மேலும் கருத்துசுதந்திரத்திற்காகவும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வாதாடியும் போராடியும் வருபவன் என்ற முறையிலும் நானே ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலும் ஒரு போதும் ஊடகங்களை அவமதிக்க விரும்பமாட்டேன்.
என் கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
மனுஷ்ய புத்திரன் என்று இன்று வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.