ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி போட்டி!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

jothi balakrishna1 - 2026

ஒசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஜோதிபால கிருஷ்ண ரெட்டிக்கு 44 வயது ஆகிறது.B.sc.,B.ed படித்துள்ள இவர் 2006-2011 ம் ஆண்டு ஒசூர் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றியுள்ளார்.

இவரது கணவர் பாலகிருஷ்ணா ரெட்டி ஒசூர் நகர்மன்றத் தலைவராகவும், தமிழக அமைச்சராகவும் இருந்துள்ளார்.

ஒசூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்பது குறிபிடத்தக்கது ஜோதியின் பெயர் அறிவிக்கப்பட்டதும் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.