விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரிய பொது நல வழக்கு தள்ளுபடி : உயர் நீதிமன்றம்

 
தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று( 04-01-20165 ) பொது நல வழக்கு தொடரப்பட்டதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி இன்று செய்தது.
அந்த வழக்கை மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும்.அதிமுக-வின் அம்மா’ இலவச சட்ட உதவி மையத்தின் செயளாலருமான ஏ. ஜெயராம், தொட ர்ந்து இருந்தார்.
 
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வழக்கறிஞர் கூறிதாவது :-
‘தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்வேறு குற்றங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மக்களிடையே அச்ச உணவை ஏற்படுத்துகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“எதிர்காலத்தில் பொது மக்களின் அமைதியை அச்சுறுத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தடுப்பது மிகவும் அவசியம். சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பது போதுமானது அல்ல.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட என்றால் விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
அந்த மனு இருவர் அமர்வு கொண்ட நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிரபாகரன் ஆகியோர் முன்னிலைக்கு இன்று காலை ( 05-01-20165 ) விசாரணைக்கு வந்தது .
விஜயகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்
வழக்கின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு என்பதால் அதற்க்கு
கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.