வரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை!

உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
seeman vaiko - 2026

கூட்டணிக் கட்சியா தோழமைக் கட்சியா என்ற குழப்ப நிலை அரசியலை எல்லாம் மறந்து, கருணாநிதிக்கு சிலை எடுக்கும் விழாவில் வைகோவும் ஆஜரானார். கூட்டணியில் இல்லாத நிலையிலும் கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் பட்ட ராகுலுக்கு தனது வழிமொழிதலையும் வைகோ கொடுத்திருப்பார். 

வைகோ இப்போது பேசும் பேச்சுகளை எல்லாம் விட, முன்னர் பேசியவைதான்.. தமிழக மக்களின் நெஞ்சங்களில் பசுமையாக அறையப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வரலாறு பேசும் வைகோவின் இந்த வீடியோ…

இந்த வீடியோவில் வைகோ பேசுவதை முழுவதும் கேட்டால் அந்த அரசியல் பின்னணி புரியும்! நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் என்ற இடத்தில் 9 மணிக்கு பேசிவிட்டு தேவர்குளத்திற்கு போகும் வழியில் 10 மணிக்குள் முத்தையா என்பவர் இவரின் காரை மறித்து நிறுத்தி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்கிறார். அதனால் மேற்கொண்டு அடுத்த கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என்கிறார்.

இரவு என்பதால், 10 மணிக்குள் அடுத்த கூட்டத்துக்குச் சென்று பேச வேண்டிய அவசர கதியில் செல்கிறார் வைகோ.  

சரி… இப்போது உண்மை என்ன என்று பார்ப்போம்…  மறைந்த பாரத பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது இரவு 10:21 க்கு. அவர் இறந்த செய்தி பிறகுதான் வெளியே வந்திருக்கும். அதாவது குறைந்த பட்சம் 10:30 மணிக்கு மேல்தான் தெரிந்திருக்கும்.

அப்படி இருக்கும்போது 10 மணிக்குள் இவருக்கு முத்தயா எப்படி சொன்னார். அதாவது ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பே இவருக்கு கொல்லப்பட்டார் என்று எப்படி சொன்னார்கள். அதே வீடியோவில் கடைசியில் சொல்கிறார்.

எனது வீட்டில் , இல்லை எனது தம்பியின் வீட்டில் .. இல்லை எனது தம்பியின் வீட்டில் இருந்த 21 விடுதலைப்புலிகள் பொதிகை நகரில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்களாம். இதை சொல்லும்போது ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

SRK – 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.