தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தி.மு.க ஆர்ப்பாட்டம்

 

தி.மு.க மகளிர் அணி சார்பில் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வருகிற 30–ந் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

 

பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, வீரகோபால், தமிழ் மணி, சி.ஆர்.ராமச்சந்திரன், மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டர் அணி, துணை செயலாளர் மீனா லோகு முன்னிலை வகிக்கிறார்கள்.

 

முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், கோவை மு.ராமநாதன், பொங்கலூர் பழனிச்சாமி, விடுதலை விரும்பி, இரா. மோகன் மற்றும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது