குடியரசு தின பேரணி ஒத்திகை பயிற்சியின் போது ஏற்ப்பட்ட கொடூர விபத்தில் விமானப்படை அதிகாரி பலி

 
குடியரசு தின பேரணிஒத்திகை பயிற்சியின் போது கோப்ரல் அபிமன்யு கௌட்(30) என்ற விமானப்படை அதிகாரி ஒருவர் கார் மோதி கொல்கத்தாவில் பலியானார் .
 
கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா பேரணிக்கான ஒத்திகையை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார்.
 
அப்போது அவ்வழியாக வந்த ஆடி கார் ஒன்று அவர் மீதும் பின்னர் சாலையில் உள்ள தடுப்பாண்கள் மீதும் மோதி நின்றது. இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்ற சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டான். காரை பறிமுதல் செய்த காவல் துறையினர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
 
அந்த அதிகாரி படுகாயங்களுடன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழ்ந்தார்.
 
பொதுமக்களுக்கு பொதுவாக இதுபோன்ற ஒத்திகையின் போது சாலை அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.