புத்தாண்டு நள்ளிரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்! வந்தது கட்டுப்பாடு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
04 Nov 08 Dhin Crackers waste - 2026

ஆங்கிலப் புத்தாண்டு துவங்கும் நாளில் நள்ளிரவு ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க தீபாவளி நாளில் இரண்டு மணி நேரமும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு துவங்கும் நள்ளிரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனால், ஆங்கில புத்தாண்டு துவங்கும் நாளில், நள்ளிரவு, ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும்’ என, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது, உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த, அந்தந்த மாநில அரசுகள் கடுமையான கண்காணிப்புடன் செயல்படுகின்றன. தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன.

அது போல், வரும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நள்ளிரவு, 11:30 மணி முதல் 12:30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிப்போர் எண்ணிக்கை குறைவு. பனிக்காலம் என்பதால், பட்டாசு வெடிக்கும்போது, காற்று மாசு ஏற்படும். எனவே, அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; அனுமதிக்கப்படாத நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம்… என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தடை மீறி பட்டாசு வெடித்தால், புகார்கள் பதிவு செய்யப் படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.