திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது : துக்ளக் ஆசிரியர் சோ

 
திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது என்றும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். திமுகவின் மீண்டும் குடும்ப ஆட்சி வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. உடல் நலம் குன்றியிருந்தும் இந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். இதில், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்
விழாவில் கலந்து கொண்ட துக்ளக் ஆசிரியர் சோ பேசியதாவது :-
திமுக ஆட்சியில் சினிமா, அரசியல் என அனைத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்றது. மூத்த மகன், இளைய மகன், பேரன், பேத்தி என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்தனர். அந்த நிலை இப்போது இல்லை.தமிழகத்தில் குடும்ப ஆட்சி போனதற்கு அதிமுகதான் காரணம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.
அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. தமிழகத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்துக்கு ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர். ஆனால், அதிலும் போகப் போக ஒரு வரைமுறை வந்து எல்லா இடங்களிலும் திருப்திகரமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குடும்ப ஆட்சி போனதற்கு தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வருகிறார். மத்திய அரசிடம் இருந்து போராடி பெற வேண்டியதைப் பெற்று வருகின்றனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சிரத்தையுடன் போராடி நீதிமன்றம் மூலம் தமிழகத்துக்குச் சாதகமான உத்தரவுகளை அதிமுக பெற்றுள்ளது.மேலும், தமிழகத்தில் திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது என சோ தனது உரையில் வலியுறுத்தினார்.
விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் பேசியதாவது :-
த.மா. கா மூத்த தலைவ எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
 
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்
அரசியல் கட்சிகள் மீது பொதுமக்கள் சாதிச்சாயம் பூசவேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.
 
பா.ம. க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் சினிமா கலாச்சாரம் ஊறி திளைத்திருப்பதாகவும், வளர்ச்சிப்பணிகள் தேக்கமடைந்துள்ளதால் மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், தெரிவித்தார்.
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைக் கைவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார். மேலும்
ஆசிரியர்.சோ. மீது தான் நல்ல அபிமானம் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா,
இன்றைய அரசியலில் எதிர் கருத்துக்கள் விவாதிக்கப்படுவதில்லை என்றும், தீர்மானங்கள் விவாதங்களின்றியே நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
பா.ஜ.க அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
குஜராத்தைப் போல் பாரதிய ஜனதாவின் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் என்பது தனது விருப்பம் என்றும், 1967ம் ஆண்டு செய்த தவறை தமிழக மக்கள் மீண்டும் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.
துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றிய சோ. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.