தமிழக சட்டமன்றத்தில் முக்கியமாக மதுவிலக்கை பிரச்சினையை தி.மு.க. கிளப்ப திட்டம் !

சற்றுமுன்
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் முக்கியமாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த பிரச்சினையை கிளப்ப தி.மு.க. திட்டம் போட்டுள்ளதாக தெரிகிறது.
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு அளித்தார் . அப்போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது :-.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனது அரசியல் விளம்பரம் அல்ல .அது தவறான கருத்து. முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகி வாய்தா வாங்கியதும் அரசியல் லாபமா? கடந்த நான்கரை ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தவறுகள், முறைகேடுகள் நடந்து உள்ளன. இதுபற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடுவதில்லை. மேலும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தி.மு.க. தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.