அறந்தாங்கி அருகே அழியா நிலை ஆஞ்சநேயருக்கு இரவில் வெண்ணெய் காப்பு பூஜை

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரத்துடன் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இக்கோயிலில் நேற்று அதிகாலை அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்த நிலையில் சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஆஞ்சநேயப் பெருமானுக்கு வெண்ணை காப்பு சாற்றி தீப ஆராதனை நடந்தது

இதில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

IMG 20190105 WA0112 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.