நடிகர் விஜய்யை ரவுண்ட்டு கட்டிய சீமான்! ரசிகர்கள் கடும் கொந்தளிப்பு!

Published:

13 May28 Seeman - 2026

நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து  சீமான் பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் ரஜினி, கமல் குறித்து விமர்சித்துப் பேசினார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான், ஜெயலலிதா இருந்தபோது, அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் உண்மையான ஆண்மகன் என்றார். மேலும், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் ஹீரோக்கள் இல்லை, ஜீரோக்கள் என்று விமர்சித்த சீமான், நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் இனிமேல் சிம்பு தான் சூப்பர் ஸ்டார் என்று கூறிய சீமான், ரியல் சூப்பர் ஸ்டார் சிம்புதான் என்றும் வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

நடிகர் விஜய் குறித்து பேசிய அவர்,  ‘சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் எனத் தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் எனக் கூறுவது எல்லாம் அவமானம்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது, அவரே மோடியின் அடிமை. பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்க மாட்டான். உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா?

இதில் ஒரு விரல் புரட்சியாம், என் படத்தில் நடிக்க மாட்டாராம். ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்’ என விஜய்யை விமர்சித்திருந்தார்.

நீ எல்லாம் … என்று ஒருமையில் பேசி சீண்டி விட்டது, விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பாஞ்சாலங்குறிச்சி என்ற ஒரு காமா சோமா படம் எடுத்து, என் வேட்டி அவிழ்ந்து விழும் யோகம் இன்னிக்கு.. என் சேலை அவிழ்ந்து விழும் யோகம் இன்னிக்குன்னு செக்ஸ் படம் எடுத்தவன்லாம் பேச வந்துட்டான் என்று சமூக வலைத்தளங்களில் சீமானை வெளுத்து வாங்குகிறார்கள் விஜய் ரசிகர்கள்!

Related articles

Recent articles

spot_img