தள்ளி வைத்தால் தப்பில்லை: எஸ்.வி.சேகர்

சற்றுமுன் தமிழகம் மதுரை
sveshekhar - 2026

தள்ளி வைத்தால் தப்பில்லை என்று பாஜக., வைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகரிடம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், தேர்தலைத் தள்ளி வைத்தார் தப்பில்லை என்றார்.

திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிவைக்க வேண்டும் என்று சொல்லும் சில கட்சிகளின் கருத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும், புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மக்களுக்கு தற்போது கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் இடைத்தேர்தலால் கிடைக்கப் பெறாமல் போகும் வாய்ப்புள்ளதால் தள்ளிவைத்தால் தவறில்லை என்றும் கூறினார் எஸ்.வி.சேகர்!

திமுக., தலைவர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப் பட்டு, அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் நிவாரணப் பணிகள் முழுமையாக முடியாத நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக., உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.