அனுமதியின்றி போராட்டம் -ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
MK SATALIN - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அனுமதியின்றி பேரணி நடத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுகரசர் உள்ளிட்ட 7 கட்சி தலைவர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர்,கராத்தே தியாகராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கட்சினர் பங்கேற்றனர்.

ஆனால் இந்த போராட்டம் அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர்,கராத்தே தியாகராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகிய 7 பேரும் வரும் 26 ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.