திருப்பாவையில் ஐதீகங்கள் – பாசுரம் 23!

சற்றுமுன் திருப்பாவை
thiruppavai pasuram23 - 2026

(மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யானங்களில்…)

அழகர் கிடாம்பி ஆச்சான் அருளப்பாடு ஒன்று சொல்லிக்காண் என்ன, அபராத ஸஹஸ்ர பாஜனம் என்று தொடங்கி அகதிம் என்ன, நம் இராமானுசன் உடையராய் இருந்து வைத்து அகதிம் என்னப் பெறாய் என்று அருளிச் செய்தார்.

அதாவது ஸ்ரீ கிடாம்பியாச்சான் என்னும் ஆசாரியர் திருமாலிருஞ்சோலை அழகரை சேவிக்கையில், அழகர் அவரை ஒரு சுலோகம் சொல்ல நியமிக்க அவரும் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்திலிருந்து அபராத ஸஹஸ்ர பாஜனம் என்ற ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்.

அதில் அகதிம் – அதாவது கதி இல்லாதவன் என்ற பொருள்பட, அந்த பதம் வந்தவாறே அழகரும் நம் இராமானுசனின் அடியராய் இருக்கும்போது இப்படி கதியற்றவன் என்று எப்படி விண்ணப்பிக்கலாம் என்று அருளிச் செய்தார்.

அதாவது இராமானுசன் அடியாராய் இருந்தும் இப்படி சொல்வதே என்று கருத்து. இதேபோல் இடைச்சிகள் கண்ணனிடம்… யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள வேணும் என்று விண்ணப்பிக்க, தான் சென்று இவர்கள் காரியத்தை முடித்துக் கொடுக்க வேண்டி இருக்க இவர்கள், நப்பின்னைப் பிராட்டி பரிஹரமாயிருக்க … இவர்கள் இப்படி விண்ணப்பிப்பதே என்று கண்ணன் திருவுள்ளம்!

  • வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.