07 June01 Anna - 2026

அண்ணா பல்கலை., புதிய தேர்வுக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2017ம் ஆண்டு முதல், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு புதிய அரியர் விதிகள் அமல் செய்யப் பட்டுள்ளன. ஒரு பருவத் தேர்வில் மூன்று அரியர் பாடங்கள் மட்டுமே திரும்ப எழுத முடியும் என்ற விதிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒன்று , மூன்று, ஐந்து என்ற ஒற்றைப் படை தேர்வில் தோற்ற பாடங்கள், இரண்டு, நான்கு, ஆறு, என இரட்டைப் படை பருவத் தேர்வில் தோற்ற பாடங்களை அதே போன்ற ஒற்றைப் படை, இரட்டைப் படை பருவத் தேர்வின் போதே எழுத முடியும் என்ற கட்டுப்பாட்டுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது மாணவர்கள் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கும் செயல் என்று கூறும் மாணவர்கள், தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுத ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவர்களின் போராட்டத்துக்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நெல்லையில் நடைபெறுகிறது. இதற்காக மாணவர்களை அழைத்துள்ளது.

r2017 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ABVP தேசிய மாணவர் அமைப்பு ஆதரவு போராட்டத்தை முன்னேடுத்து செல்ல ABVP அழைப்பு ஆலோசனை கூட்டம் (20.01.2019)ஞாயிறு காலை 10 மணியளவில் ABVP அலுவலகம் (47A,சன்னியாசி கிராமம், மீனாட்சிபுரம், திருநெல்வேலி சந்திப்பு) தொடர்புக்கு:(8220277050,8300246306,7810059993)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending