என் உயிருக்கு ஆபத்து: நீதிபதி மீது குற்றம்சாட்டிய மதுரை வழக்குரைஞர் ‘வாட்ஸ்ஆப்’பில் அலறல்!

Published:

உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் என்பவர் குற்றம் சாட்டி வாட்ஸ்ஆப்பில் வைரலாகப் பரவிய ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக, அடுத்து இன்னொரு ஒலிப்பதிவையும் வாட்ஸ்அப்பில் உலவ விட்டுள்ளார். அதில், தன் உயிருக்கு ஆபத்து என்று அபயக் குரல் கொடுத்துள்ளார்.
 
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றும் நீதியரசர் மீது பீட்டர் ரமேஷ் எனும் வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒலிப்பதிவின் மூலம் கூறி அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்.
 
வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பான செய்திகளை செய்தி ஊடகங்கள் வெளியிடகூடாது என்று செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் மிரட்டல் விடுப்பதாக பீட்டர் ரமேஷ் அந்த ஒலிப்பதிவில் கூறியிருந்தார்.
 
மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர் மீது பீட்டர் ரமேஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார். அந்த ஒலிப்பதிவு வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.
 
இந்நிலையில், நீதியரசர்கள் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார் வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ். இது குறித்து தனியாக உலவவிட்டுள்ள ஒரு ஒலிப்பதிவுடன், நடிகை விஜயசாந்தி கையால் உதையா?” என்ற தலைப்பில் ஒரு செய்தியும் உலா வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்தச் செய்தியில், “நீதியரசர்கள், அரசு வழக்கறிஞர்கள், காமகளியாட்டம், பாலியல் தொந்தரவு மற்றும் விபசாரத்தில் ஈடுபட்டு ,  நடிகை விஜயசாந்தியால் கட்டி வைத்து உதைப்பட்டனரா…???
 
நிம்மி என்ற பெண் வழக்கறிஞருக்கு நீதிபதி பதவி தருவதாக கூறி, ஏமாற்றி, வாழ்க்கையை சீரழித்தனரா???
 
உயிருக்கு ஆபத்து, அபயக் குரல் எழுப்பும் முன்னாள் மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பீட்டர்ரமேஷ்…?
 
நீதிதுறை மாண்பு ,நேர்மையான நடவடிக்கைகள் மூலம் காக்கப்படுமா!!!!!காப்பாற்றப்படுமா?” – என்று பரப்பப்பட்டு வருகிறது.
 
நீதிபதிகள் மீது ‘பகீர்’ குற்றச்சாட்டை முன்வைக்கும் வழக்குரைஞர்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. சில நேரங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாகவும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வைரலாகப் பரவி சிலரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் விதங்களில் அமைந்ததுண்டு.
 
இருப்பினும், பொதுவாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் அதுபோன்றதே என்று புறந்தள்ளி விடவும் முடியாது என்றும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் அந்த ஒலிப்பதிவில் உயர் நீதிமன்ற நீதியரசர் மீது வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார். அந்த ஒலிப்பதிவு வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது .
 
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த ஒலிப்பதிவுடன் வழக்குரைஞர் பீட்டர் ரமேஷின் புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

 

Related articles

Recent articles

spot_img