தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கெயில் எரிவாயு திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்ய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விளைநிலைங்கள் வழியாக எரிவாயு குழாயை பதிக்க எந்தவித தடையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், எரிவாயு குழாயை பதிக்கும் பாதையை மாற்றி அமைக்க தமிழக அரசிற்கு எந்தவித உரிமையும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போதைய சந்தை விலையை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

