December 6, 2025, 9:39 AM
26.8 C
Chennai

பட்ஜெட்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள்..!

budget session1 - 2025

பிப்.1 இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கே…

நிதிநிலைச் சமன்பாடு பாதிக்கப்படாமல் தாக்கல் செய்யப் பட்டிருக்கும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பாராட்டிற் குரியது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வருமானத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். மீனவர்களின் நலன் காக்க, தனியாக மீன்வளத் துறை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத் தக்கது! தேசிய கல்வி இயக்கம், சமூக நலத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், சுகாதாரம் போன்ற பல துறைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
– தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி.

மத்திய பட்ஜெட் மக்களை ஆசை வார்த்தை கூறி, திசை திருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள், உள்நோக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கை எடுப்போம் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கலால் வரியாக ரூ.18 லட்சம் கோடி வசூலித்து, பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பா.ஜ., அரசு ஏதோ திடீரென கனவு கண்டு எழுந்ததுபோல அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உண்மையில் இந்த அறிக்கை பிரதமர் மோடிக்கு கொடுங்கனவாகவே இருக்கப் போகிறது. 
– மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சென்னை தூத்துக்குடி சரக்கு தொடர் வண்டிப் பாதை போன்ற எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களுக்கு அறிவிப்பு கூட இல்லை
– மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட பட்ஜெட்டாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி மேற்கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

இந்திய மக்களுக்கு பொய்மாலை எனும் மத்திய பட்ஜெட் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
– திருநாவுக்கரசர்

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆண்டு வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டதன் அறிவிப்பாக பட்ஜெட்டை எடுத்துக்கொள்ளலாம்
– பாரிவேந்தர், ஐஜேகே

வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது.
– டிடிவி தினகரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories