ஹார்வார்டு பல்கலை. மாநாட்டில் நடிகர் கமல் பங்கேற்றார்

சற்றுமுன்

வாஷிங்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6 மற்றும் 7 தேதிகளில் வருடாந்திர இந்தியக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.இந்த ஆண்டு கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளானது “மாறி வரும் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்’ என்பதாகும்.

இதில் தொழிலதிபர்கள், கலைத்துறையினர், அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உலகிற்கு தலைமை தாங்கும் நோக்கில் இந்தியா குறித்து உரையாடுவர்.

கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும், வெளியுறவுக் கொள்கை குறித்து அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் நிருபமா ராவும் தலைமை உரையாற்றுவர்.

நடிகர் கமல்ஹாசன் பேச்சுரிமை குறித்தும், சசி தரூர் இந்தியாவின் ஆற்றல் குறித்தும் உரையாற்றினார். மாநாட்டில் கலந்து கொள்வோர் சமநிலை இணையச் சேவை, நீதி கிடைக்கச் செய்தல் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.