இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான் நினைக்கவில்லை: வங்கதேச பெண் எழுத்தாளர் கருத்து

சற்றுமுன்

கோழிக்கோட்டில் நடந்த இலக்கியத் திருவிழாவில், சகிப்பின்மை குறித்த விவாதத்தின் போது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா தெரிவித்ததாவது:

 

இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான் நினைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் மற்றவர்களின் மத நம்பிக்கையின் மீது முழு சகிப்புத்தன்மை கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

 

இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மைவாதிகள், ஹிந்து அடிப்படைவாதிகளை மட்டும் ஏன் கேள்வி எழுப்புகின்றனர் என்பதை கண்டு வியப்படைகிறேன்.

 

இந்தியாவில் உள்ள சட்டங்கள் சகிப்பின்மையை ஆதரிக்கவில்லை. ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்கள் ஏராளமாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வங்கதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களால் ஹிந்துக்கள் எந்த மாதிரியான துன்பங்களை அடைந்துள்ளனர் என்பது குறித்து 1994-ஆம் ஆண்டு தஸ்லீமா நாவல் ஒன்றை எழுதினார்.

 

இதனால் முஸ்லிம் மத அடிப்பபடைவாதிகளின் கோபத்துக்கு ஆளான தஸ்லீமாவுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.