குற்றாலம் மெயினருவி பகுதியில் சிறுத்தை; மக்கள் அச்சம்!

சற்றுமுன்

courtallam tiger - 2026

குற்றாலம் மெயினருவி பகுதியில் மீண்டும் சிறுத்தை உலா வருகிறது என்பதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில், அவ்வப்போது சிறுத்தைப் புலி தலை காட்டுவதாகக் கூறப்படுவதுண்டு.

இந்நிலையில் இன்று சிறுத்தைப் புலி குற்றாலம் மலைப் பகுதியில் உலா வந்ததாக வனத்துறையினருக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படமும் வெளியானது.

IMG 20190223 WA0257 - 2026இந்நிலையில், அது உணவு தேடி வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். பலரும் வந்து செல்லும் குற்றாலம் மலைப் பகுதி, தற்போது, மழை இன்மையால், நீர் வரத்து இன்றி காணப்படுகிறது.

இருப்பினும், குற்றாலம் மெயினருவியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை அறிந்து குற்றாலம் வாழ் பொதுமக்கள், வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.