செருப்பு, ஷூ போட்டுக்கிட்டு திருப்பதி மலை படிகள்ல நடக்கலாமா? ராகுலுக்கு குவியும் கண்டனங்கள்!

Published:

rahul treaks tirupati - 2026

வெள்ளிக்கிழமை நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருப்பதியில் சுவாமி தரிசனம்  செய்யச் சென்றார். அப்போது அவர், படிகளில்  ஏறிச் சென்று பிரார்த்தனை செய்தார். ஆந்திர  மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து  பிரார்த்தனை செய்ததாக அவர் கூறினாலும், ராகுல் கால்களில் காலணி ஷூ அணிந்து சென்றதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

திருப்பதியில் அலிபிரியில் இருந்து 3625 படிகள் மற்றும் தார் சாலைகள் மூலம் நடந்து வேங்கடவனை தர்சனம் செய்யப் போகிறார்கள்! அவர்கள் தங்கள் கால்களில் காலணியோ அல்லது ஷூ போன்ற கால் அணிகளையோ அணிந்து செல்ல மாட்டார்கள்! காரணம் அந்த ஏழுமலைகளும்  சாளக்கிரம ரூபமான மலைகள்! அதன் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து சூடம் ஏற்றி வழிபட்டவாறே செல்வார்கள்! அவ்வளவு மரியாதை அந்தப் படிகளுக்கு உண்டு!

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும்  அவருடன் சென்ற அதிகாரிகள் உட்பட பலரும் காலில் காலணிகளை அணிந்த படி  மேலே நடந்து சென்றுள்ளனர்! யாரும் தடுக்கவுமில்லை! என்ன ஒரு கோலம்?!

இதையே மற்ற மத நம்பிக்கைகளில் செய்வாரா? படிமேல் ஏறிச் செல்வதில் தவறில்லை! ஆனால் அதை எவ்வாறு செய்ய  வேண்டும் என கேட்டுச் செய்ய வேண்டும்! ராகுலின் இந்தத் தவறை வன்மையாக  கண்டிக்கிறோம் … என்று ராகுலுக்கு கண்டனத்தைத் தெரிவிக்கின்றனர் இந்து மத நம்பிக்கையாளர்கள்!

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img