தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
gold shop - 2026

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என அனைத்து இந்திய ஆபரணக் கற்கள் மற்றும் நகைக் குழுமத்தின் தலைவர் அனந்த பத்மநாபன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளதால், கள்ளச் சந்தை எழுச்சியை தடுக்கும் விதத்தில் தங்கத்தின் இறக்குமதி வரியை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும். 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்க நகை வாங்குபவர்களிடம் பேன் கார்டு எண் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

பட்டை தீட்டப்பட்ட வைரங்கள், ஆபரணக் கற்கள் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்… என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.