நீங்க தேசபக்தி உள்ள இந்திய கட்சின்னு உலகம் நம்பணுமே மிஸ்டர் சிதம்பரம்?!

Published:

hraja - 2026

நீங்க தேசபக்தி உள்ள இந்தியக் கட்சிதான்னு உலகம் நம்பணுமே! என்ன செய்யலாம் என்று காங்கிரஸ் சிதம்பரத்துக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக.,வின் ஹெச்.ராஜா.

இன்று காஷ்மீரின் 40% பகுதி பாக் வசம் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். 40000 ச கிமீ இந்தியப் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ். நீங்கள் தேசபக்தி உள்ள இந்திய கட்சி என்று உலகம் நம்ப வேண்டுமே? என்ன செய்யலாம்.. என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா

காரணம், புல்வாமோ தாக்குதல், தொடர்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஆகியவை குறித்து பிரதமர் மோடி தெரிவித்த தேசப் பற்றுக் கருத்துகளை அரசியல் ஆக்கி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக எண்ணிக் கொண்டு, ராணுவத்தையும் நாட்டையும் விமர்சித்து வருகின்றனர் காங்கிரஸார். இதன் மூலம், தேசப்பற்று என்றால் அது பாஜக., மட்டுமே என்ற எண்ணத்தை தாமாகவே ஒப்புக் கொண்டு வருகின்றனர் காங்கிரஸார்.

முன்னதாக, இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

அவரது கேள்விக்கான பதில் கேள்வியாக ஹெச்.ராஜா இதனைக் கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img