அந்த லெவலுக்கு எங்களை கீழே இறங்கவிட மாட்டீங்கன்னு நம்புறோம்! ஊடகங்களை மிரட்டும் அதிமுக.,!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

jayalalithaa statue admk office - 2026

அந்த அளவுக்கு எங்களை கீழே இறங்கவிட மாட்டீங்கன்னு நம்புறோம் என்று ஊடகங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது அதிமுக.,!

அதிமுக கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் கருத்து கேட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த வேண்டாமென அதிமுக சார்பில் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

அதிமுக சார்பில் ஊடகங்களில் கட்சியினர் யாரும் தன்னிச்சையாக கருத்து கூற வேண்டாம் என்று இரு தினங்கள் முன்பு எச்சரித்திருந்தது அதிமுக தலைமை.

இந்நிலையில் வியாழக்கிழமை இன்று அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில்,

‘அதிமுக சார்பில் கருத்துதெரிவிக்க கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர மற்றவர்களை அழைத்து கருத்து தெரிவிக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம்.

வேறு நபர்களை அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம். மீறும் பட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கோ, செய்திகளுக்கோ அதிமுக எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

இது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அறிக்கை வெளியிட்ட நிர்வாகி பெயர் ஏதும் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.