சிறுவர்களுக்கு சரக்கு வித்தா… சஸ்பெண்ட்தான்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

TASMAC - 2026

சிறுவர்களுக்கு சரக்கு விற்காதீர்கள் என்று டாஸ்மாக் கடை ஊழியர்களை எச்சரிக்கின்றனர் அதிகாரிகள்!

டாஸ்மாக் மதுக்கடைகளில் சிறுவர்களுக்கு மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. மதுக்கடைகளில் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவு உள்ளது. அதையும் மீறி சென்னை புறநகர் மதுக் கடைகள் மற்றும் அதை ஒட்டியுள்ள பார்களில் சிறுவர்களுக்கு பீர் மது வகைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன!

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறிய போது, அரசு அனுமதித்த வயதைவிட குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மதுக் கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது!

இதற்காக சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என்ற வாசகம் அடங்கிய விளம்பர பதாகை கடைகள் முன் தொங்கவிடப்பட்டுள்ளன! இவற்றை மீறி சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்! பார்களில் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று எச்சரிக்கை தெரிவித்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.