நெல்லை டூ ராமநாதபுரம்! வெற்றி விநாயகர் ஆசியுடன் பிரசாரத்துக்கு புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்!

Published:

nainar nagendran1 - 2026நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் இன்று வீட்டில் மற்றும் கோயில்களில் பூஜைகளை செய்து, வெற்றி விநாயகர் ஆசியுடன் ராமநாதபுரத்துக்கு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்திருக்கும் தே.ஜ.கூட்டணியில் பாஜக., சார்பில் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரத்துக்காக இன்று நெல்லையில் இருந்து புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.

nainar nagendran2 - 2026

தனது தந்தை நயினார் தேவர் மற்றும் வீட்டில் உள்ள மூத்தோர்களின் பாதம் வணங்கி வெற்றி விநாயகருக்கு பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து மகாராஜநகர் அதிசய விநாயகர் கோவிலில் வழிபட்டு, பின்னர்  ராமநாதபுரத்துக்கு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காகப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.

nainar nagendran3 - 2026

பாஜக.,வினருக்கு இந்த முறை ராமநாதபுரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. காரணம், காசியும் ராமேஸ்வரமும் இந்துக்களின் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவ்விரு புனிதத் தலங்களிலும் பாஜக., வென்றே தீர வேண்டும் என்று உறுதியுடன் உள்ளனர். வாராணசி தொகுதியில் நரேந்திரரும் ராமநாதபுரம் தொகுதியில் நாகேந்திரரும் போட்டியிடுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர் பாஜக.,வினர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

குறிப்பாக, நரேந்திர மோதியின் தொகுதியான வாராணசி அவரது பணிகளால் மிகப் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கங்கை தூய்மையடைந்துள்ளது. அது போல், ராமநாதபுரமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் மத்தியில் மீண்டும் மோதி அரசு அமையும் போது, ராமநாதபுரத்துக்கு நிதி உதவி அதிகம் கிடைத்து, தொகுதியில் குடிநீர்ப் பிரச்னைகள் குறைந்து, நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர் பாஜக.,வினர்.

தற்போது தனுஷ்கோடி, பிரதமர் மோதியின் தயவால் மீண்டும் உருப் பெற்றிருக்கிறது. அதுபோல், அப்துல் கலாம் மணி மண்டபம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மேலும் இந்தத்தொகுதி வளர்ச்சிப் பாதையில் செல்ல பாஜக., வெற்றி பெற வேண்டும் என்று ஒட்டு மொத்தக் குரலில் கூறுகின்றனர்.

dhanushkoti - 2026

தாமிரபரணி தந்த தாமரை நாயகன் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வருக வருக என்று ராமநாதபுரத்தில் பாஜக.,வினர் உற்ஸாகத்துடன் வரவேற்கக் காத்திருந்தனர்.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img