இனி நீங்கள் ரவி எனப்படுவீர்கள்! உங்கள் பெயருடன் ஒரு பெண் பெயரும் உள்ளதல்லவா?!: வி‘ஷால்’!

Published:

13 June27 Vishal - 2026

உங்களுக்கு இனி ரவி என்ற பெயர் மட்டும் போதும்; ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா? என்று ராதாரவி குறித்து விஷால் டிவிட்டரில் நக்கல் அடித்துள்ளார்.

‘கொலையுதிர் காலம்’ படத்தின் நிகழ்ச்சியில் பேசிய திராவிடக் குலக் கொளுந்து பகுத்தறிவுப் புயல் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனும் நடிகருமான ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து கேவலமான முறையில் பேசினார். இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இது தேர்தல் காலம் என்பதால், திமுக.,வைச் சேர்ந்த ராதாரவியின் பேச்சு மக்களவைத் தேர்தலில் பாதகத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், ராதாரவியை பலிகடா ஆக்கி, கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப் படுவதாக திமுக., அறிவித்தது.

radharavi - 2026

இது தொடர்பாக நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

அன்புள்ள ராதாரவி சார். ஆம், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனி நீங்கள் உங்களை ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் பெயருடன் ஒரு பெண்ணின் பெயரும் உள்ளதல்லவா? – என்று கூறியுள்ளார் விஷால்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img