October 22, 2021, 3:11 am
More

  ARTICLE - SECTIONS

  இது ஆவுறதில்ல.. மய்யனாரே..! ஓர் அஞ்சு நிமிசம் கூட உம்ம பேச்ச கேட்கமுடியறதில்ல!

  kamal torch2 - 1

  கமல ஹாசன் பேச்சை ஐந்து நிமிடம் மேல் கேட்க முடியவில்லை. சினிமாத்தனமாக இருக்கிறது.. தேதி வாரியாக கொலை செய்தது அரசுகள் என்று மத்திய அரசை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டு.. ஓட்டு கேட்கும் அயோக்கியத்தனத்தை கம்யூனிஸ்டுகள் என்றோ கேட்டு ஓட்டு வாங்கி அடக்கமாகி விட்டார்கள்.

  எங்கள் கோவை தொகுதியில் எப்போதும்.. அதாவது சுமார் ஆறு முறை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். சுப்பராயன், உமாகாந்த், பார்வதி கிருஷ்ணன் இப்படி.. இவர்கள் என்ன தொகுதிக்கு செய்தார்கள் என்றால்.. இன்குலாப் ஜிந்தாபாத்.. உழைப்பாளர் ஒற்றுமை ஓங்குக என்பார்கள்.

  இன்றுமே பழைய தலைமுறை ஆசாமிகள்.. கம்யூனிசம் பேசுவதை பார்க்கலாம். ஆட்டோ கார ஆசாமிகள .. லம்பாக ஒத்தை கிராக்கியை கறக்க இந்த கம்னாட்டியிசம் உதவுகிறது.

  இங்கு காங் கூட ஜெயித்து இருக்கிறது.. இரண்டு முறை பாரதிய ஜனதா.. ஆனால் இந்த தொகுதிக்கு செய்தது.. என்ன செய்தது என்பது சிபிஆர் கும்பிடும் சிவனுக்கே வெளிச்சம்தான். அதிமுக செய்தது வேண்டுமானால் அதிகம் எனலாம். திமுகவின் ஆட்சியில் கட்டிய மேம்பாலத்தை இன்னும் பஜனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். கோவணம் மாதிரி இருக்கும் இந்த அவினாசி ரோடு மேம்பாலம் காலாவதியாகிவிட்டது. அத்தனை டிசைன் ஃபால்டுகள் வேறு. மழை நீரில் ஏரியாகும். வெயில் காலங்களில் பார்க் ஆகும் அன்டர்கிரவுன்ட் பாலத்தின் கீழ் பல கொலைகள் இலவசமாய்..

  காந்திபுர பாலம் அதிமுக கட்டியது.. எதற்கு என்று யாருக்கும் தெரியாத புதிர் பாலம் அது. ஸ்மார்ட் சிடி என்று எல்லா பக்கமும் ரோடு போட்டு.. கீழே பாதாள சாக்கடைக்காக தோண்டியது ஓரிரு இடங்களில் முடிவுக்கு வந்தது. பல இடங்களில் கடப்பாறை பசியோடு காத்துக்கொண்டிருக்கிறது.

  அரசு மருத்துவமனை மிக பரிதாபமான ஒன்று. ஊரின் தண்ணீர் பிரச்சினையை இந்த கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் சீனாவில் இருந்து க்ளேஸியர் இறக்குமதி செய்ய முடிவெடுத்தார்கள் போல. அதனால் எதுவுமே செய்யவில்லை. பல பள்ளிகள் வாழை மண்டியாகி விட்டது. பல பார்க்குகள் பலான வேலைகளுக்கு நேர்ந்து விட்ட மாதிரி தோன்றுகிறது. ஏரிகளுக்கு உள்ளேயே வீடு கட்டி கம்யூனிஸ்ட் போடு வைத்தவர்களை கும்பிட தோன்றுகிறது.

  கோவையோடு கொச்சி மெட்ரோவையும் அறிவித்தார்கள். கொச்சி மெட்ரோ ஓடுகிறது. இங்கு ப்ளானே போட்டு முடிக்கவில்லை. வளர்ச்சி எல்லாம் எதற்கு என்று ஒரு தொம்பிகளின் கூட்டம் வந்தாலும் வரும்.

  சரி இதெல்லாம் பற்றி பேசாமல்.. கொலை செய்தது மோதி என்கிற கமலுக்கு ஜே. இது ஆவறதில்ல மய்யனாரே..

  • பிரகாஷ் ராமஸ்வாமி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-