முதல்வர் வாகனத்தில் செருப்பு வீசியது யார்?!

Published:

edappadi van chappel - 2026

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு வாக்கு சேகரித்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாட்டில் நேற்று இரவு 9:00 மணி அளவில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் செருப்பை வீசியுள்ளார். செருப்பு வேனின் பின் பகுதியில் விழுந்தது.

ஆனால் முதல்வரின் பிரசாரம் முடியும் வரை அந்தச் செருப்பை எடுத்து வேனில் இருந்த எவரும் கீழே போடவில்லை.

இந்நிலையில், செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தி.க., சார்பு இயக்கங்களான மகஇக உள்ளிட்டவைகளும், திமுக.,வும் பெரும்பாலான ரவுடித் தனங்களில் ஈடுபட்டு, இங்கே புகழ்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img